கல்லீரல் பிரச்னையால் உயிரிழந்த இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலாவின் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. 24 படங்களை இயக்கியுள்ள அவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக மனோபாலாவின் உடல் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது. அனைவரும் அஞ்சலி செலுத்தியபின் அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.