சினிமா
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து உயிரிழப்பு!
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை உயிரிழப்பு
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து(57) இன்று காலை டப்பிங் முடித்து வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு. சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சீரியலில் அவர் பேசும் வசனங்கள் சமூல வலைதளங்களில் பயங்கர வைரலானது.
மாரிமுத்து தமிழில் "கண்ணும் கண்ணும்", "புலிவால்" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். "பரியேறும் பெருமாள்", "விக்ரம்", "ஜெயிலர்" உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். மாரிமுத்துவின் இறப்பு சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் இறப்புக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.