தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம்
‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்துவந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு [12.01] மணிக்கு இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தனுஷின் மாஸ் காட்சிகள் நிறைந்துள்ள டீசருக்கு, சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
1.33 நிமிட டீசரில் டயலாக் பெரிதாக இல்லாமல் படம் முழுக்க சண்டை, துப்பாக்கி என புதுமையாக கவனம் ஈர்க்கிறது.இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15 உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் 'கேப்டன் மில்லர்' திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.