ஆகஸ்டில் அட்டகாசம்...ஜெயிலர், போலா சங்கர் - டபுள் ட்ரீட் தரும் தமன்னா...
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.ஆனால், சில வருடங்களாக அவர் நடித்து வெளிவந்த படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். இப்படத்தில் முதல் சிங்கிள் பாடலான 'காவாலா, காவாலா' என கிளாமர் காட்டி பாடி, ஆடி கடந்த மூன்று வாரங்களாக பலரையும் தள்ளாட வைத்துள்ளார் தமன்னா.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என டபுள் ட்ரீட் தர உள்ளார் தமன்னா. ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினிகாந்துடன் அவர் நடித்துள்ள 'ஜெயிலர்' படமும், ஆகஸ்ட் 11ம் தேதி சிரஞ்சீவியுடன் நடித்துள்ள 'போலா சங்கர்' தெலுங்குப் படமும் வெளியாக உள்ளது. இரண்டு மொழிகளிலும் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரது படங்களில் நடித்து இரண்டுமே அடுத்தடுத்த நாட்களில் வெளிவருகிறது என்பது தமன்னாவுக்கே டபுள் ட்ரீட் தான்.

கந்த சில தினங்களுக்கு முன்பு தமன்னா நடித்து ஓடிடி யில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' வெப் தொடர் ஜூன் 29 ஆம் தேதி வெளியானது. அதில் தமன்னா படு கிளாமராக நடித்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு வெப் தொடரில் படுக்கையறை காட்சிகளில் படு கிளாமராக நடித்து இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த தமன்னா, எனது சினிமா வளர்ச்சிக்கும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு நான் முயற்சி செய்து வருகிறேன் என்றார்.

ஒரு பக்கம் வெப் தொடர்கள், மறுபக்கம் காதல் விவகாரம் என கடந்த சில மாதங்களாகவே பரபரப்பில் இருக்கும் தமன்னாவுக்கு அடுத்த மாதம் தங்கமான மாதமாக அமையப் போகிறது.