சினிமா
’கஸ்டடி’ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் டிரெயல்ர் ரிலீஸ் தேதி அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைத்தண்யா நடிக்கும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் மே 5 ஆம் தேதி வெளியாகுமென அப்படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு - தமிழ் என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் முதன்முறையாக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்தப் படத்தில் நாகசைத்தண்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே டீசர், மற்றும் சிங்கிள் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, பிரியா மணி, சரத்குமார், பிரேம்ஜீ, ராம்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் வரும் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.