Chandramukhi 2 - Moruniye Lyric பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பெறும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இதன் இரண்டாம் பாகம் ’சந்திரமுகி 2’என்ற பெயரில் உருவாகி உள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு பதிலாக கதை நாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.காமெடியனாக வடிவேலுவும், முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகாவும் நடித்துள்ளனர்.
அதேப்போல் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் ரஜினிகாந்த்- வடிவேலு காமெடி கூட்டணி மிகப்பெரிய ஹைலட்டாக அமைந்தது. அதேபோல் இந்த பாகத்திலும் ராகவா- வடிவேலு கூட்டணி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சமீபத்தில் கூட வடிவேலு டப்பிங் பேசும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்திரமுக 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தி ரிலீசாக செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், சந்திரமுகி 2 படத்தின் Moruniye Lyric பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ராகவா லாரன்சின் நடனம் சிறப்பாக உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.