ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் ஆகியோர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இந்தத் திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மைசூரில் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்னும் 10 - 15 நாட்களில் படப்பிடிப்பு நிறைவாகும் இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகத் தயாராகியுள்ளது.
மேலும், இந்தப் படம் 2005இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் தொடர்ச்சியா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
இந்தப் படத்தில் ராதிகா, லக்ஷ்மி மேனன், சுருஷ்தி தாங்கே, மஹிமா நம்பியார், ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாகமான ‘சந்திரமுகி’ தமிழ் சினிமா வரலாறு காணாத வசூல் சாதனையைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.