"சந்திரமுகி" திரைப்படம் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் மாபெரும் ஹிட் கொடுத்த ஒரு திரைப்படம். நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஜோதிகா, நயன்தாரா, பிரபலங்கள் பிரபு, வடிவேலு, நாசர், வினீத் உள்ளிட்டோர் நடித்து பட்டிதொட்டி எங்கும் ஹிட் கொடுத்தது சந்திரமுகி. குறிப்பாக ஜோதிகா கதாபாத்திரம் பலரையும் ஈர்ததது என்றே சொல்லலாம்.
"சந்திரமுகி" படத்தில் ரஜினி-வடிவேலு காமெடி பயங்கரமாக வார்க் அவுட்டானது. வித்யாசாகர் இசையில் பாடல்களும் அடி தூள் கிளப்பியது. இந்நிலையில் "சந்திரமுகி-2" திரைப்படம் பி.வாசு இயக்கத்தில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் இருக்கும் என்று படக்குழு கூறிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறுகிறது.
அதை தொடர்ந்து "சந்திரமுகி-2" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் கல்லூரியில் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குநர் பி.வாசு, கதாநாயகன் ராகவா லாரன்ஸ், கதாநாயகி கங்கனா ரனாவத், இசையமைப்பாளர் கீரவாணி, தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இசை வெளியீட்டு விழா முழு வீடியோவை பார்க்க: Click Here