சினிமா
மீண்டும் திரையில் சுஷாந்த் சிங்!
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி’ ரீ-ரிலீஸாக உள்ளது.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தை வரும் மே 12ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீ-ரிலீஸ் செய்ய அப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நீரஜ் பாண்டே இயக்கிய இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சுஷாந்த் சிங் திரைவாழ்விலும் மிக முக்கியமான படமானது.
இந்தப் படம் இந்தியாவிற்கே மிக முக்கியமான படம் என்பதால் அதை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்கிறோம் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 2011இல் இந்தியா உலகக் கோப்பை வென்ற தருணத்தை மீண்டும் ஒரு முறை திரையில் காணவும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை மீண்டும் காணவும் ரசிகர்கள் ஆர்வமாகியுள்ளனர்.