‘ரஜினி படத்துல நடிக்க கூப்பிட்டே நான் போகல' - பவா செல்லதுரை

புகழ் கிடைக்காமல் செத்துப்போன எத்தனையே எழுத்தாளன் இருக்கிறான்
எழுத்தாளர் பவா செல்லதுரை
எழுத்தாளர் பவா செல்லதுரை

பாரதி ராஜா, பாலு மகேந்திரா போன்றவர்கள் நடிக்க கூப்பிட்டே நான் போகல என எழுத்தாளர் பவா செல்லதுரை தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பவா செல்லதுரை சினிமா, எழுத்தாளர், இலக்கியம், அரசியல் என பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

பவா செல்லதுரை வீட்டிற்கு சென்றால் 4 நாட்கள் தங்கி கோழிக்கறி குழம்பு சாப்பிட்டுவிட்டு தெம்பாக வரலாம் என்ற பேச்சு பொதுவெளியில் உள்ளே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பவா, அப்படியெல்லாம் இல்லவே இல்லை. சாதாரண மிடில் கிளாஸ் பேமலிக்கும் கீழ இருக்கும் பேமலி. அப்பா ஒரு டீச்சர். கொஞ்சம் நிலம் வாங்கி வச்சிருந்தாரு. எங்க வீட்டுக்கு யாரு வந்தாலும் சாப்பிடலாம் அப்படிங்கிறது யார்கிட்ட இருந்து வந்துச்சினா? என்னோட அம்மாகிட்ட இருந்த வந்தது.

ஒரு ஆழாக்கு அரிசி அதிகமாக போடுவாங்க.அப்புறம் நாங்க என்ன சாப்பிடுறோமோ அது தான் வீட்டிற்கு வருபவர்களுக்கும். நிறைய பேர் சொல்வாங்க பவா வீட்டிற்கு சென்றால் கோழிக்கறி கிடைக்கும். மட்டன் கிடைக்கும் சொல்வாங்க. அப்படினா நாங்க நல்ல சாப்பிடறேனு அர்த்தம்.

நான் கல்யாணம் பண்ணத்துக்கு அப்புறம் எங்க அம்மா கிட்ட இருந்த தன்மையை என் மனைவி அப்படியே உள்வாங்கிட்டா. உண்மையை சொல்லணுனா எங்க அம்மாவை விட ஒரு படி மேலே போயிட்டா. இப்போ 50 வயதை கடந்துவிட்டோம். அதனால் தொடர்ச்சியா இது போன்று சமைப்பது என்பது கடினம். அதனால் எங்க வீட்டில் சமையல் வேலைக்கு ஆட்கள் இருப்பாங்க. யாரு வந்தாலும் 6 மாதத்திற்கு மேல் வேலையில் நீடிக்க மாட்டார்கள். ஏன் என்றால் ஆட்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள் சமைச்சிக்கிட்டே இருக்கிறோம் என்று நின்று விடுவார்கள். அவர்கள் நின்றால் அந்த இடத்திற்கு வேறு ஒரு ஆள் இருப்பார்கள். அப்படி எங்கள் வீட்டில் வேலை பார்த்த பெண்கள் குறித்து ஒரு நாவலையே எழுதலாம். அப்படி அபூர்வ பெண்கள் உள்ளனர்.

ரொம்ப கஷ்டமான காலகட்டத்தில் சாந்தி என்ற பெண் சொன்னால், நான் போயி களைவெட்டி இந்த வீட்டுக்கு சாப்பாடு போடுறேனு அண்ணானு சொல்லி இருக்கா. அந்த பெண்ணே இந்த வீட்டிற்கு வேலைக்கு வந்தவள் அவள் எங்களுக்கு சாப்பாடு போடுறேனு சொன்னா அப்படி நிறைய அனுபவங்கள் இருக்கு.

யார் வீட்டிற்கு யார் சென்றாலும், ஒரு வேலை அல்லது இருவேலை சாப்பாடு போடலாம். இல்லையென்றால் 10 நாட்கள் சாப்பாடு போடலாம். ஏனோ நமக்கு அந்த மனசு இல்லாமல் போச்சி. நாம ரொம்ப சுறிங்கிட்டோம். நம் குடும்பம், நம் ரத்த உறவு, சொந்தக்காரங்க அப்படிணு சுருங்கிவிட்டோம். அந்த சுருங்கலை கொஞ்சம் விரிவுப்படுத்தி பார்த்தால் எல்லாருக்கும் சோறு போடலாம். எனக்கு எந்த மனசு இருக்கு அப்படினு நான் சொல்லல. அப்படியான பெருமிதம் எல்லாம் எனக்கில்லை.

சமீபத்தில் எங்களுடன் இருக்கும் டேவிட் என்பவரிடம் கேட்டேன். நீங்கள் பாண்டிச்சேரியில் இருந்து இங்க வந்து( திருவண்ணாமலை) எத்தனை வருடங்கள் ஆகிறது என்றேன். அதற்கு அவர், 12 வருடங்கள் ஆகிறது சார் என்றார்.

எங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு இடம் வாங்கி வீடு கட்டிவிட்டார். அவர் எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார். எங்களுடன் அமர்ந்து சாப்பிடுவதால் எந்தவிதமான சிரமமும் எங்களுக்கு தெரியவில்லை.

இதற்கு வசதி முக்கியமில்லை. மனசுதான் முக்கியம். கஞ்சி, கூழ் குடித்து வாழும் ஏழை வீட்டிலும் 3 நாய்கள் இருக்கும் அவர்கள் சாப்பிட்ட மீதி கஞ்சி மற்றும் கூழை ஊற்றுவார்கள் அதை அவைகள் சாப்பிடும்.அதுவும் மனசு தான். பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டி அதற்குள் ஒரு நாயை வளர்த்து, அதற்கு ரூ.1 லட்சம் செலவு செய்யும் மனிதர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

அவர்கள் நாயை தங்க வைக்க கட்டப்பட்டுள்ள அவுட் ஹவுஸ்சில் 10 இளம் இயக்குநர்களை, 10 எழுத வந்த எழுத்தாளர்களை தங்க வைக்கலாம்.இதற்கெல்லாம் மனசு தான் காரணம்.

மாரி செல்வராஜ், ராஜூ முருகன் போன்ற இளம் இயக்குநர்கள் உங்களை தேட காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மாரி செல்வராஜ் எங்க வீட்டு புள்ளைய போன்றவன். நேற்று கூட ஒரு நிகழ்ச்சி சொல்லி இருக்கிறான்.அண்ணனையும்( பவா செல்லதுரை), ராம் சாரையும் நடிக்க வைக்க முடியாது. அண்ணா நிறைய படத்துல நடிக்கிறார்.அவருக்கு நார்த் ஆர்காடு பேஸ் என தெரிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் கொஞ்சம் கடுமையா நடந்துப்பேன்.அவங்க பேர்ல அதை பிறயோகிக்கக்கூடாதுனு பார்க்கிறேன் அப்படினு சொல்லி இருக்கான் மாரி செல்வராஜ். ஆனால் எனக்கு நார்த் ஆற்காடு பேஸ் எல்லாம் கிடையாது. என்னுடைய பேஸ் திராவிடன் கலர். ஆகையால் அவனுக்கு ஒரு ஐடியா இருக்கு. இதுகுறித்து பொதுவெளியில் மாரி செல்வராஜ் பேசும் போது நான் அப்படியே மறுத்தேன்.

பாரதி ராஜா, பாலு மகேந்திரா போன்றவர்கள் நடிக்க கூப்பிட்டும் போகாதவன். என் லைப்ல யார்கிட்டையும் போயி நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கனு கேட்டது கிடையாது.

அந்த கேரக்டருக்கு இவரு சரியாக இருப்பாரு அவங்களுக்கு தோணும் போது என் முகம் ஞாபகம் வரும்.அப்படி தான் ராஜூ முருகனுக்கு என் முகம் ஞாபகம் வந்துருக்கு. ஜோக்கர் படத்துடல வர செக்யூரிட்டி கேரக்டருக்கு ஒரு நாள் இரவு முழுவதும் கன்வென்ஸ் பண்ணாரு. மிஸ்கின் எனக்கு நெருங்கிய நண்பர். பிசாசு 2 எடுத்தாரு. மிஸ்கின் படத்துல நடிக்கணுனு எனக்கு ஆசை இல்லை. ஆனால் அவரின் லோக்கேஷன்ல இருக்கணுனு ஆசைப்பட்டேன். ஏன் என்றால் அந்த லோக்கேஷனையே நான் தான் அரேஞ்சி பண்ணி கொடுத்தேன். திண்டுக்கல் பக்கத்துல இருக்குற இடம் அது. பாதி மலைக்கு மேல் உள்ள ரசாட் அது. பிசாசு 2 படம் முழுக்க அங்க தான் எடுத்தாங்க. அங்க போயி 10 நாள் தங்கணுனு நினைச்சேன். மிஸ்கின் கிட்ட கேட்டேன். இந்த படத்துல நான் நடிக்கட்டா என்றேன். நான் யார்கிட்டயும் நடிக்க கேட்டது இல்ல. மிஸ்கின் சொல்லியே 2 அல்லது 3 படங்களில் நடிக்காமலே போயி இருக்கேன்.

பிசாசு 1-ல் ஆட்டோ டிரைவர் கேரக்டர் நான் பண்ண வேண்டியது. அதற்காக எனக்கு பிராக்டிஸ் எல்லாம் கொடுத்த நாளைக்கு சூட்டிங் இருக்கும் நேரத்தில் எனக்கு இதெல்லாம் வராது மிஸ்கின் அப்படினு சொல்லிட்டு வந்துட்டேன். அதற்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்தார்கள். எழுத்தாளர்கள் அப்படிதான் இருப்பாங்கனு மிஸ்கின் சொல்லி இருக்காரு. அன்று நடிக்க மாட்டேன்னு சொன்ன பவா இன்னைக்கு நடிக்க கேட்கிறேனு..மிஸ்கின் கேட்டாரு. இல்ல அந்த இடம் சுவிட்சர்லாந்து இருக்கிறத போல இருக்கும். அங்க வந்த 10 நாளைக்கு நிம்மதியாக புத்தகம் படிக்கலாம் அப்படினு கேட்டேன்.

3 நாட்களுக்கு பிறகு கால் பண்ண மிஸ்கின், பவா இந்த கதையில உங்களுக்கு டைலாக் எழுதுனா உங்களை இந்த கதைல இருந்து வெளியே தள்ளுது அப்படினு சொன்னாரு. நான் சரி என்றேன். ஒரு படைப்பாளி வெளியே செல்வதை கட்டாயப்படுத்தி உள்ளே இழுத்து வைத்தால் அது நல்லதல்ல. அப்படி படம் எடுத்தால் அது பெயிலியர் ஆகும்.

மாரி செல்வராஜ் சொல்லி இருக்கிறார் அடுத்தப்படம் திருவண்ணாமலையை மையப்படுத்தி எடுக்கப்போறேன். நீங்கள் நடிக்கனுனு சொல்லி இருக்கார். மாரி செல்வராஜ் சொலிட்டாரே..புகழின் உச்சயில் இருக்கிறார். நாம் போனால் நமனுக்கு புகழ் கிடைக்கும் என்று போக மாட்டேன். எனக்கு அப்போது விருப்பம் இருந்தால் போவேன். சமீபத்தில் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது. என்னிடம் 25 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். இடையில் 2 நாட்கள் ஜப்பான் படத்தில் நடிக்க வேண்டி உள்ளது. அதற்காக 2 நாட்கள் மட்டும் வேண்டும் என்றேன். அவர்கள் முடியாது என்றார்கள். நான் லால் சலாம் படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். ஏற்கனவே ஜப்பான் படத்தில் நடித்து முடித்துவிட்டேன்.ஆகையால் பேரு, புகழ் கிடைக்கும் என்பதால் ஒன்றும் இல்லை. எழுத்தாளனுக்கு அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. புகழ் கிடைக்காமல் செத்துப்போன எத்தனையே எழுத்தாளன் இருக்கிறான் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பவா செல்லதுரை பகிர்ந்துள்ளார்.

முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/dMZM-hgRoD8?si=7lfXS7lnymOcE1GU

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com