லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தில் வெகு ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வழக்கமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தான் நடக்கும். ஆனால், இந்த ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் தமிழகத்தில் நடத்துமாறு தயாரிப்பாளர் லலீத்தை விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழா மதுரையில் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறுமென கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.