சினிமா
ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டத்தால் பாதிப்படையும் ‘பிளேட்’!
தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டத்தால் மார்வலின் ‘பிளேட்’ படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் எழுத்தாளர்கள் சங்கத்தினர் ஒன்று சேர்ந்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பொராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இதனால் மார்வல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ‘பிளேட்’ படத்தின் பிரீ- புரொடக்ஷன் தற்காலிகமால நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் யண் திமங்கே இயக்கத்தில், மியா கோத் நடிக்கும் ‘பிளேட்’ படத்தில் நிக் பிஸ்ஸொலட்டோ எழுத்தாளராக பணியாற்றவிருந்தார். அதற்கிடையில், ஏற்பட்ட இந்த எழுத்தாளர்கள் போராட்டத்தால் இந்தப் படத்தின் வேலைகள் பாதிப்படைந்துள்ளது.