சினிமா
'வீடே இரண்டாக போகுது'- பிக் பாஸ் சீசன் 7 புது அப்டேட்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஆவலை அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் 7 விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் டிவியில் வெளியாகும் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி ரொம்பவே பிரபலமானது. அதிலும் இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் கமல் ஹாசன் ஹோஸ்ட் செய்வது தான் ப்ளஸ் பாய்ண்ட். அவருக்காகவே பார்ப்பவர்கள் இங்கு அதிகம் பேர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் புரோமோ விஜய் டிவி யூடியூப் சேனலில் வெளியானது. அதில் கமல் ஹாசன் இரு வேடங்களில் வருகிறார். வீடு இரண்டாக போகிறது என்று புது ட்விஸ்ட்டை கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வீடியோவாக பார்க்க: Click Here