இரண்டு வீடுகள்… BIGG BOSS சீசன் 7 ப்ரோமோ வெளியானது

இரண்டு வீடுகள்… BIGG BOSS சீசன் 7 ப்ரோமோ வெளியானது

விஜய் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஷோவின் 7ஆவது சீசன் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகப்பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது

முதல் 6 சீசனில் இருந்தது போல் இல்லாமல் 7ஆவது சீசனில் இரண்டு வீடுகளில் இந்த போட்டி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் சில தகவல்கள், அப்டேட்டுகள் மற்றும் போட்டியாளர்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com