சினிமா
தமிழில் ரீமேக்காகும் ‘பூல் புல்லய்யா -2’!
கார்த்திக் ஆர்யன் - கியாரா அத்வானி நடிப்பில் இந்தியில் வெளியான ‘பூல் புல்லய்யா -2’ திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் ஆர்யன் - கியாரா அத்வானி நடிப்பில் இந்தியில் வெளியான ‘பூல் புல்லய்யா -2’ திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகமான ‘பூல் புல்லய்யா’ தமிழில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தின் ரீமேக்காகும்.
மேலும், சந்திரமுகி படமே மலையாளத்தில் ஃபாசில் இயக்கிய ‘மணிச்சித்ரத்தாழ்’ படத்தின் ரீமேக்காகும். இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை யார் இயக்கவுள்ளார், யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்தமையால், இதனின் ரீமேக் உரிமத்தை தான் வாங்கியுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.