குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பெல்’!

குரு சோமசுந்தரம் நடிப்பில், வெங்கட் புவன் இயக்கத்தில் ‘பெல்’ எனும் திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பெல்’!

குரு சோமசுந்தரம் நடிப்பில், வெங்கட் புவன் இயக்கத்தில் ‘பெல்’ எனும் திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து மிக அழுத்தமான, நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தத் தகுந்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் குரு சோமசுந்தரம்.

அடர்ந்த காடைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கதைக்களத்தைக் கொண்ட திரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் கல்கி, பெட்டர் ராஜ், ஜாக் அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படத்தொகுப்பை தியாகராஜன் கவனிக்க, நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com