சினிமா
ஹீரோவாகும் ’பிக்பாஸ்’ அசீம்!
பிக்பாஸ் மூலம் பிரபலமான அசீம் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘பிக்பாஸ்’தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அசீம், தற்போது ஹீரோவாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் டிஸ்கஸன் ராஜஸ்தான் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் லோகேஷன் தேடலுக்காக பொன்ராம் ராஜஸ்தான் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் திரைவாழ்வில் மிக முக்கிய படங்களான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களைத் தந்தவர் பொன்ராம். இதனால் இது இருவருக்கும் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையுமென திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.