அயலி வெப் சீரிஸ் முதல் எதிர்நீச்சல் வரை.. சின்னத்திரையை கலக்கும் காயத்ரி கிருஷ்ணன்

நடிகை காயத்ரி கிருஷ்ணன் அயலி வெப் சீரிஸ் முதல் எதிர்நீச்சல் சீரியல் வரை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பலரின் பாராட்டை பெற்று வருகிறார்.
நடிகை காயத்ரி கிருஷ்ணன்
நடிகை காயத்ரி கிருஷ்ணன்

அயலி என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி கிருஷ்ணன் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வரும் ஜான்சி ராணி கதாபாத்திரம் இவருக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது.

பி.எச்.டி முடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணன் தியேட்டர் ஆர்டிஸ்ட், மாடலிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் ஒரு மாடலிங் போட்டியில் வேலு நாச்சியர் கெட்டப்பில் காயத்ரி கிருஷ்ணன் மிரட்டியிருக்கிறார்.அந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று விருதையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில்தான், ஜீ தமிழில் 'அமுதாவும் அன்னலெட்சுமியும்' விஜய் டிவியில் 'கிழக்கு வாசல்' ஆகிய போன்ற சீரியல்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார்.ஆனால், காயத்ரிக்கு தற்போது சினிமா, வெப்சீரிஸ், சீரியல் என அனைத்திலும் வாய்ப்புகள் தேடி வருவதால் அவர் கால்ஷீட் பிரச்னையில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக விஜய் டிவியின் 'கிழக்கு வாசல்' தொடரிலிருந்து விலகியுள்ளார். குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரம் மக்களிடையே அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது.

காயத்ரி கிருஷ்ணனின் நடிப்பிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளதால் காயத்ரி கிருஷ்ணன் மகிழ்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com