சினிமா
பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் அட்லீ
பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தெறி’. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இத்திரைப்படத்தை அட்லீ தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை இயக்கப்போவது யார் உள்ளிட்ட தகவல் இனி வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.