16 வருஷம் எனக்கு சோறு போட்ட தெய்வம் விஜயகாந்த் என நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நமது குமுதம் யூடியூப் சேனலில் வெளியாகும் 'நான் யார்' நிகழ்ச்சி மூலம் சினிமா பிரபலங்கள், தொழில் முனைவோர், விளையாட்டு வீரர்கள், சோசியல் மீடியா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் தனது வாழ்க்கையின் சொல்லப்படாத பக்கங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "எம்.ஜி.ஆரிடம் வேலை பார்த்த மாணிக்கம் அண்ணன் மூலமாக தலைவரை பார்க்க போனேன். 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்த எனக்கு கருவாடு, மீன் உள்ள அசைவ உணவு கொடுத்ததும் 3 நாள் பட்டினியை தீர்த்துக்கொண்டேன்.பின்னர் தலைவரை (எம்.ஜி.ஆர்) பார்த்தேன். அவர் எனக்கு ரூ.5ஆயிரம் கொடுத்தார். என்ன செய்கிறாய் என கேட்டார். தலைவரே..உதவி இயக்குநராக இருக்கேன்.அப்படினு சொன்னேன். பாரதி ராஜா போன்றவர்களிடம் சொல்லிவிடவா என கேட்டார்.அய்யா வேண்டாம். ஏற்கனவே கண்ணதாசன் அய்யா சொல்லி சேர்ந்தேன் என ஒரு மாதிரியாக பாக்குறாங்க என்றேன்.நீங்க முதலமைச்சராக இருக்கீங்க இப்போ நீங்க சொன்னீங்கன்னா அப்புறம் என்னை ஓரங்கட்டிடுவாங்கனு சொன்னேன்.நீ சரியா தான் சொல்றானு சொன்னார். எனக்கு தலைவர் கொடுத்த ரூ.5 ஆயிரத்தை வைத்து 6 மாதத்திற்கான சாப்பாட்டு டோக்கன் வாங்கிவிட்டேன்.2500 ரூபாய் எங்க அம்மாவுக்கு அனுப்பி வைத்தேன். புதிய துணிகள் எடுத்தேன். மேலும் தலைவர் என்னை பார்த்து, அடிக்கடி என்னை வந்து பார் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
வடிவேலு ரியாக்ஷன் பண்றது அப்படி ரசிக்க வைக்கும். படிப்பறி கம்மிதான் எல்லோருக்கும் நடிப்பு, டைலாக் சொல்லி கொடுப்பான்.இன்னைக்கு இருக்குறவங்க பண்றதெல்லாம் காமெடியா? வடிவேலு பண்ணதுதான் காமெடி.அவனுக்கு அப்படி ஒரு திறமை நல்ல பாடுவான்.
யோகிபாபுவிற்கு நடிக்க ஒரு சீன் கேட்போம்.அவனை பார்த்தாலே பயமா இருக்குண்ணே. அவன் முடி அப்படி இருக்குனு வடிவேல் சொல்வான்.அன்னைக்கு எனக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம். யோகி பாபு ரூ.300 ரூ.400 வாங்குவான், 2வது படத்தில் 1500 வாங்கினான்.அதற்கு அடுத்த படத்தில் 3 லட்சம் அடுத்தடுத்த படங்களில் 6லட்சம் ஆனது. இப்போ 10 லட்சம் வாங்குறான். நான் இன்னும் அதே சம்பளத்தின் தான் உள்ளேன். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு வராது.
வடிவேலுவை அறிமுகம் செய்ததில் நானும் ஒருவன். வடிவேலு கிட்ட போனதுக்கு அப்புறம் தான் என் குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட எல்லா பிரச்னையும் தீர்ந்தது.
வடிவேலு கூட நடிச்சி, நடிச்சி இனி வடிவேலு கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். 16 வருசம் எங்களுக்கு சோறு போட்டவரு. எனக்கு தெய்வம். எங்க அப்பா, அம்மாவுக்கு விஜயகாந்த் என்ற மனுஷன் இல்லனா நான் இங்க இல்ல.
விஜயகாந்த் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு சூட்டிங் முடிச்சிட்டு வருவார்.நாங்கள் 15,20 பேர் படுத்துக்கொண்டிருப்போம். யாரையும் எழுப்பாமல் ஒரு ஓரமா துண்டு விரிச்சி படுத்துக்கிட்டு இருப்பார். நான் எழுந்து அண்ணே.. நீங்கள் ஏன்? இங்கே படுத்தீர்கள் என கேட்டால்.. டேய் சத்தம் போடாதே.எல்லோரும் தூங்குகிறார்கள்.அவர்களை எழுப்பி விட்டுடாத அப்படினு சொல்வார். அதேபோல் ஜே.கே ரித்தீஷ் என் மடியில் விழுந்து செத்தது தான் ரொம்ப வேதனை இருந்தது என சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான முழு வீடியோவை பார்க்க லிங்க் கிளிக் செய்யவும்.