இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர்.எக்ஸ்’ படத்தின் மோசன் போஸ்டர் நேற்று(மே 1) அப்படக்குழுவால் வெளியிடப்பட்டது. பிரின்ஸ் பிக்ஷர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, இதற்கு முன்பு விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படததின் திரைக்கதையை மனு ஆனந்துடன் சேர்ந்து திவ்யங்கா ஆனந்த் சங்கர், ராம் புத்ரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்பா - மகனுக்கு இடையேயான உணர்ச்சிமிக்க பாசப் போராட்டங்களும் உள்ளது என அப்படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகளை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளனர். இந்தியா, உகாண்டா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறுமென இயக்குநர் மனு ஆனந்த் தெரிவித்துள்ளார். தன்வீர் மிர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு உலகெங்கும் வெளியாகுமென அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.