சினிமா
300 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த ‘பொன்னியின் செல்வன் -2’!
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா லக்ஷ்மி, திரிஷா ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் -2’ மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. எற்கனவே, இந்தத் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு சாதனையை இந்தத் திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
உலகெங்கும் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அப்படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைண்ந்ு தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இன்னும் சில நாட்களில் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.