அஜித்தின் அடுத்த படமான ‘AK 62' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு நாட்களாக வெளிவராமல் இருந்து வந்த நிலையில், இன்று(மே 1) அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தப் படக்குழுவினர் இதுகுறித்து அறிவித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘விடாமுயற்சி’ எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தப் படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், கருத்து வேறுபாட்டால் வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து, இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் எனப் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் ஏனைய நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமெனத் தெரிகிறது.