சத்தமே இல்லாமல் AK செய்யும் சம்பவம் ..! உருவாகும் ஆவணப்படம்...

அஜித்தின் கதை - திரைக்கதை
அஜித்தின் ஆவணப்படம்
அஜித்தின் ஆவணப்படம்

அஜித் துணிவு படத்திற்கு .பிறகு மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை மே மாதமே படக்குழு துவங்கும் என்றும், அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகிவுள்ளது.சமீபத்தில் தான் அஜித் தன் வேர்ல்ட் டூரின் முதல் பகுதியை வெற்றிகரமாக முடித்தார். இதையடுத்து விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தகட்ட டூரை துவங்கவுள்ளார் அஜித். அவர் பைக் டூர் சென்றதை ஆவணப்படமாக்கத் திட்டமிட்டுள்ளார் அஜித்.இப்படத்திற்கு அவரே கதை,திரைக்கதை உருவாக்க்கியுள்ளார்.இப்படத்திற்க்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்க்கான எடிட்டிங் வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இந்தப் படத்தின் ஒரு காட்சிகள் கூட வெளியே கசியக் கூடாது என்பதில் அஜித் மிகவும் கவனமாக இருக்கிறாராம். ஆவணப்படத்திற்க்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகிறது. விரைவில் இந்த ஆவணப்படத்தை OTT யில் வெளியிட அஜித் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு முன்னணி OTT நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து இந்த ஆவணப்படத்தை வாங்க தயாராக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. விரைவில் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சத்தமில்லாமல் சம்பவம் செய்து கொண்டிருக்கிறார் அஜித்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com