சினிமா
Ajith Kumar World Tour-ன் முதற்கட்டம் நிறைவு
நடிகர் அஜித் செல்லும் World Tour-ன் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
’துணிவு’ திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு நடிகர் அஜித் தன்னுடைய பைக்கில் உலகத்தை சுற்ற தொடங்கினார். முதற்கட்டமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் தன்னுடைய பைக்கில் சுற்றிய அவர், கடந்த சில நாட்களாக நேபால் , பூடான் நாடுகளில் பைக் ரைடு செய்து வந்தார்.
இந்தியா, நேபால் மற்றும் பூடான் நாடுகளை முழுவதும் சுற்றியுள்ள அவர் தன்னுடைய உலக டூரின் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
அடுத்தகட்ட ரைடு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.