சினிமா
சூர்யா - சுதா கொங்கரா படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் விருப்பம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படியிருக்க இத்திரைப்படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது