சினிமா
மே 9ஆம் தேதி வெளியாகும் 'ஆதிபுருஷ்' ட்ரெய்லர்
பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ட்ரெய்லர் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஓம் ராவுத் இயக்கத்தில், பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் டீசர் சென்ற ஆண்டு வெளியானது. இது நெட்டிசன்கள் மத்தியில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் இத்திரைப்படத்தின் வெளியீடு தேதி ஒத்திவைக்கப்பட்டு கிராஃபிக்ஸ் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டியது.
தற்போது இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.