’ஸ்வேதாவை பொண்ணு கேட்டு வரலாமா’?- நடிகை மிர்ணா மேனன் குறித்த மீம்கள் வைரல்

நெல்சன் என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்தார்.
நடிகை மிர்ணா மேனன்
நடிகை மிர்ணா மேனன்

ஜெயிலர்’ படத்தில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மிர்ணா மேனனை பெண் பார்க்க வீட்டுக்கு வரலாமா? போன்ற மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 500 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

இந்த படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகம் உள்ளிட்டோர் நடித்துள்ள காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், வசந்த் ரவி, சுனில், மிர்ணா மேனன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜெயிலர் படத்தில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிர்ணா மேனன் பேசுகையில், ”நெல்சன் என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்தார். படத்தில் நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருப்பதால் ஒப்புகொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன்” என பேசினார். இந்த நிலையில் நடிகை மிர்ணா மேனன் ஜெயிலர் திரைப்படத்தில் ’ஸ்வேதா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினியின் மருமகளாக நடித்துள்ள இவரின் பட காட்சிகள் நகைச்சுவை மீம்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும், ’ஸ்வேதாவை பொண்ணு கேட்டு வீட்டுக்கு வரலாமா, பெரிய டைனோசர் எதுவும் செய்யமாட்டாரே.அவரை பார்த்தாதான் பயமா இருக்கு.. போன்ற மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com