'தமிழ் இயக்குநர்கள் என்னை கவனிக்கவில்லை என்ற வலி இருக்கு' - மம்தா மோகன்தாஸ்

விஜய் சேதுபதி உடன் நடித்தது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு மாதிரி என்று நடிகை மம்தா நெகிழ்ச்சி
மம்தா மோகன்தாஸ்
மம்தா மோகன்தாஸ்

நடிகை மம்தா மோகன்தாஸ் தமிழில் "சிவப்பதிகாரம்" திரைப்படம் மூலம் அறிமுகமானவர். மலையாள திரையுலகில் முக்கிய பிரபலங்கள் உடன் நடித்து பெரும் ஹிட் படங்களை கொடுத்தவர். மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக தற்போதும் வலம் வருபவர். இடையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பெரும் போராட்டத்திற்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்தவர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது தமிழ் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மம்தா மோகன்தாஸ். அதிலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவரது 50வது படமான "மகாராஜா" படத்தில் மம்தா நடித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் அப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் குமுதம் யூட்யூப் சேனலில் பிரத்யேகமாக படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றியும், கல்லூரி நாட்கள் பற்றியும், ஆரம்ப காலங்களில் திரைப்படங்களுக்குள் வந்த அனுபவங்களை பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

வீடியோவை முழுமையாக பார்க்க: Click Here

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com