விஜய் ஆண்டனி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, காவியா நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது படகு விபத்து ஏற்பட்டது. இதனால் விஜய் ஆண்டனி மற்றும் காவியா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். குறிப்பாக விஜய் ஆண்டனி மயக்கமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
சில நாட்களிலேயே தான் நன்றாக இருப்பதாக அவர் ட்வீட் செய்து ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்தார். தற்போது அந்த விபத்தை குறித்து நடிகை காவியா பேசியுள்ளார். அப்போது அவர், இருவரும் ஒரு ஜெட் ஸ்கீயில் இருந்ததாகவும், எதிர்பாராதவிதமாக ஒரு அலை அடித்ததால் கட்டுப்பாடை இழந்து ஒரு படகில் மோதியதாக குறிப்பிட்டார். விபத்துக்கு பின் தான் நீந்தி கடலின் மேற்பரப்புக்கு வந்ததாக கூறிய அவர், விஜய் ஆண்டனி எந்த ஒரு அசைவும் இன்றி நீருக்குள் இருப்பதை பார்த்து, பதறிப்போய் அவரை மேற்பரப்புக்கு இழுத்து வந்துள்ளார். அந்த அதிர்ச்சியை விஜய் ஆண்டனி கையாண்ட விதத்தை காவியா பாராட்டியுள்ளார்.