’இதயம்’ சீரியல் குறித்து நடிகை ஜனனி அசோக்குமார் சுவராஸ்யமான பல்வேறு தகவல்களை நமது குமுதம் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
கணவனின் சப்போர்ட் இல்லாமல் பெண்கள் அவங்களே இல்லாத்தையும் பார்த்துக்குற நிலைமைல இருக்காங்க. அடுத்து ஒரு ரிலேஷன்ஷிப்க்குள்ள அவங்க போறாங்கன்னா எடுத்த உடனே அவங்களை தப்பா தான் பார்ப்பாங்க.இதை கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டினாலும் தப்பா போயிடுனு அப்படிங்கிறது கதை கேட்கும் போதே நினைச்சேன்.ஒரு பெண் தனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துட்டு போறா அப்படிங்கிறது தான் கதை. நான் கிளிசிரின் போட்டு அழ மாட்டேன்.நானே ஃபீல் பண்ணிதான் அழுவேன் என இதயம் சீரியல் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நடிகை நடிகை ஜனனி அசோக்குமார் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஜனனி அசோக்குமார் நாயகியாக நடித்து வெளிவர இருக்கும் இதயம் சீரியல் புரொமோ மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து பேசிய நடிகை ஜனனி அசோக்குமார், ”இதயம் சீரியலில் என்னோட கேரக்டர் புதுசுதான். இதுவரை நெகட்டிவ், போல்டான பொண்ணா நடிச்சி இருக்கேன்.இதயம் பாரதி கேரக்டரும் போல்டான பொண்ணுதான். அவளோட கணவர் இறந்ததுக்கு அப்புறம் ஒரு குழந்தையை எப்படி வளக்குற, இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இதயம் பெற்றவருடன் உறவை எப்படி எடுத்துக்கிட்டு போற. அப்படிங்கிறதை பத்திதான் இந்த கதை இருக்க போகுது.இந்த சீரியல் தமிழ் சீரியல்களிலும், நான் பண்ண சீரியல்களிலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
கதை களமும் அப்படிதான் இருக்கு.இந்த டீம்மில் இருக்குறவங்களும் இதை இன்னும் சிறப்பா எடுத்துக்கிட்டு போகணுனு நினைக்கிறோம்” என்றார்.