பூர்வீகம் கேரளா.. தமிழ் சினிமாவை தன் திறமையால் கலக்கி கொண்டிருக்கும் இவானா!

கேரளாவை சேர்ந்த நடிகை இவானா தமிழ் திரையுலகில் இயக்குநர் பாலா மூலம் அறிமுகமானவர். அதையடுத்து "லவ் டுடே" படம் மூலம் பிரபலமானவர்
நடிகை இவானா
நடிகை இவானா

கேரளாவை சேர்ந்த இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. தமிழ் திரையுலகிற்கு இயக்குநர் பாலாவின் "நாச்சியார்" படம் மூலம் அறிமுகமானவர் இவானா. அந்த திரைப்படம் வந்த புதிதில் யார் இந்த சின்ன பெண் புதிதாக உள்ளது என்று இவானாவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. சென்னை தமிழில் பேசி நடித்திருப்பது மிகவும் அருமையாக இருந்தது என்று பலரும் பாராட்டி இருந்தனர்.

"நாச்சியார்" இவானா
"நாச்சியார்" இவானா

இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த "லவ் டுடே" படத்தின் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவரது தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமானார் இவானா. "லவ் டுடே" படம் தற்போது இருக்கும் இளைஞர்கள் வாழ்வோடு ஒன்றி போயுள்ள கதையாக இருந்ததால் அந்த படத்தை பலரும் அவர்களது வாழ்வில் கனெக்ட் செய்து கொண்டனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் படி அமைந்திருந்தது.

"லவ் டுடே" இவானா
"லவ் டுடே" இவானா

அதனை தொடர்ந்து இந்தியன் கிரிக்கெட்டர் தோனி தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமான "எல்ஜிஎம்-ல்" இவானா கதாநாயகியாக நடித்திருந்தார்.

"எல்ஜிஎம்" இவானா
"எல்ஜிஎம்" இவானா

கேரளாவில் பிறந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் தன் திறமையால் ஓர் ரவுண்ட் அடித்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவிலும் இவானா அறிமுகமாகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. "கள்வன்", "காம்பிளக்ஸ்" உள்ளிட்ட படங்களை இவானா கைவசம் வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com