சினிமா
நடிகர் விக்ரமுக்கு காயம்… ‘தங்கலான்’ படப்பிடிப்பு ஒத்திவைப்பு
‘தங்கலான்’ படப்பிடிப்பு ரிஹர்சலின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது
‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு நேற்று ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு பணிகளை நடிகர் விக்ரம் தொடங்கினார். சென்னை மற்றும் மதுரையில் இன்னும் 25-30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியிருந்த நிலையில், ரிஹர்சலின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இன்னும் 30 நாட்கள் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.