பேரனின் காதணி விழாவிற்கு வந்த ரஜினிகாந்த்- கோவையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

முன்னதாக விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவில் வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

பேரனின் காதணி விழாவிற்கு கோவைக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது.

விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் விசாகனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கின்றனர்.

இதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்தடைந்தார்.அவருக்கு ரஜினி ரசிகர் மன்றத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் ரசிகர்களுக்கு கையசைத்தவாறு காரில் புறப்பட்டார்.

முன்னதாக விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. செளந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com