சினிமா
கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுக்கும் ‘மாநகரம்’ ஸ்ரீ
நீண்ட இடைவேளைக்கு பின் நடிகர் ஸ்ரீ தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார்
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘இறுகப்பற்று’. இத்திரைப்படத்தில் விதார்த், விக்ரம் பிரபு, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் மாநகரம் திரைப்படத்தின் ஸ்ரீயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’ போன்ற படங்களில் நடித்தார். தனிப்பட்ட காரணங்களால் நடிப்பில் இருந்து விலகியிருந்த அவர், 6 ஆண்டுகளுக்கு பின் தற்போது கம்பேக் கொடுக்கவுள்ளார்.