மலையாளம், தமிழ் மற்றும் கன்னட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் கசான் கான், மாரடைப்பால் மரணமடைந்தார்.
கசன் கான் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெரும்பாலும் படங்களில் வில்லன் பாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார். சிஐடி மூசா, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, தி டான் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட படங்களில் நடித்துள்ளார்.
ஷாஜி கைலாஸின் 1995 ஆம் ஆண்டு வெளியான தி கிங் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்த விக்ரம் கோர்படே என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானார். இந்தப் படம் கசன் கானை மலையாள நடிகராக அறிமுகப்படுத்தியது. 1992 ஆம் ஆண்டு செந்தமிழ் பாட்டு திரைப்படத்தில் பூபதியாக கசன் கான் நடிகராக அறிமுகமானார். கலைஞன், சேதுபதி ஐபிஎஸ், டூயட், முறை மாமன், ஆணழகன், கருப்பு நிலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக கடந்த 2008ம் ஆண்டு பொன்னம்பலம் இயக்கி வெளியிட்ட பட்டைய கிளப்பு என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல அவர் இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லைலா ஓ லைலா என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.