சினிமா
‘தங்கலான்’ படப்பிடிப்பில் மீண்டும் தடங்கல் !
படப்பிடிப்பின்போது நடிகருக்கு காயம் ஏற்பட்டதால் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் சிறிய தடங்கல் ஏற்பட்டுள்ளது
பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தங்கலான்’. கர்நாடகாவின் கே.ஜி.எஃப் தங்கச்சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகத்தீவிரமாக நடந்து வருகிறது.
அண்மையில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக நடிகர் விக்ரம் படப்பிடிப்பில் இருந்து தற்காலிகமாக விலகினார். இப்படியிருக்க இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் படப்பிடிப்பில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். இதனால் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் மேலும் ஒரு தடங்கல் ஏற்பட்டுள்ளது.