இன்டெர்வெல் சீனுக்கு ஏத்த மாதிரி தான் வீடோட அமைப்பு இருக்கும்- ஜெயிலர் ஒளிப்பதிவாளர்

இன்டெர்வெல் சீனுக்காக ரொம்ப யோசிச்சு ஷூட் செய்தோம் என்று ஜெயிலர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் பேச்சு.
ஜெயிலர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்
ஜெயிலர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன்

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் பெற்றுள்ளது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் நட்சத்திரங்கள் மட்டுமல்லாது மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மோகன்லால், விநாயகன், கர்நாடகத்தின் ஸ்டாரான சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷேரோஃப், தெலுங்கு சினிமாவின் பிரபலரமான நகைச்சுவை நடிகர் சுனில், நடிகை தமன்னா, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் கிஷோர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இந்திய திரையுலகையே கலக்கி கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் குமுதம் யூட்யூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.

ஜெயிலர் திரைப்பட்ட இசை வெளியீட்டு விழாவில் மிகவும் உணர்ச்சிகரமாக ரஜினியை பற்றி பேசியிருந்தார் விஜய் கார்த்திக் கண்ணன். ஜெயிலர் திரைப்படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும், ரஜினியின் ஆஃப் ஸ்கிரின் ரியாக்சன் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

முழு வீடியோவையும் பார்க்க: Click Here

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com