இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் இசைஞானியின் ரசிகன்...!

இசைஞானியுடன் இணையும் நடிப்பின் அசுரன்...
ILAYARAJA,DHANUSH
ILAYARAJA,DHANUSH

பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனரான பால்கி இளையராஜா பயோபிக்கை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனுஷை வைத்து இளையராஜாவின் பயோபிக்கை எடுக்க தான் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இதுதான் எங்களின் கனவு படம் என்றும் கூறியுள்ளார் பால்கி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும் இடையில் சில காலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தனுஷ், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தனுஷை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி திரைப்படமும் மிகப்பெரிய வசூலை பெற்று வெற்றி பெற்றது.

தனுஷின் நடிப்பில் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தற்போது உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று யூடியூபில் சாதனை படைத்து வருகின்றது. இதைத்தொடர்ந்து இப்படம் டிசம்பர் மாதம் திரையில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்பில் இருக்கும் இப்படம் தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது

ARUN MATHEESHWARAN,
DHANUSH
ARUN MATHEESHWARAN, DHANUSH

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் டி 50 படத்தில் பிசியாகி விட்டார். பா.பாண்டி படத்திற்கு பிறகு தன் ஐம்பதாவது படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜெ சூர்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து வருகின்றனர். மேலும் தனுஷின் திரைவாழ்க்கையிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் இதுதான். புதுப்பேட்டை போன்ற ஒரு லோக்கல் டானை பற்றிய படமாக D50 உருவாகி வருகின்றது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷை வைத்து ஷமிதாப் என்ற படத்தை இயக்கிய பால்கி சமீபத்தில் ஒரு பேட்டியில் தனுஷின் முகம் இளையராஜாவின் முகம் போலவே இருப்பதால், தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் ,அவரின் பயோபிக்கில் நடிக்க தனுஷ் தான் சரியாக இருப்பார் என கூறியுள்ளார் பால்கி.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com