சினிமா
‘இந்தியன் 2’ திரைப்படத்தில் விவேக்கிற்கு வித்தியாசமான கதாபாத்திரம்: பாபி சிம்ஹா
இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக்கின் கதாபாத்திரத்தை பற்றி பாபி சிம்ஹா பேசியுள்ளார்
ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இருப்பினும் இருவரின் கதாபாத்திரமும் திரைப்படத்தில் இடம்பெறும் என்று அண்மையில் தகவல் வெளியானது. இப்படியிருக்க இத்திரைப்படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் நிச்சயம் படத்தில் இடப்பெறும் என்று இத்திரைப்படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா உறுதியளித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.