கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்து கொண்டிருந்தார். நேற்று இந்த போட்டியில் இருந்துஅவர் வெளியேறினார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்து கொண்டிருந்தார். நேற்று இந்த போட்டியில் இருந்துஅவர் வெளியேறினார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சனம் ஷெட்டியை தர்ஷன் காதலிக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு ஆதரவாக பேசினார். இதனாலேயே தர்ஷனால் சனம் ஷெட்டிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது.
இந்நிலையில் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனது காதலியை சந்தித்தார். மேலும் தர்ஷனுடன் எடுத்த போட்டோவை தனது இணையப்பக்கத்தில் சனம் ஷெட்டி பதிவிட்டிருந்தார்.
அதில், “வெல்கம் பேக் என்று கூறுவது சரியானதாக இருக்காது. கடைசி வரை தங்கியிருக்க வேண்டியவன் நீ. ஆனால் என்னவோ மக்களின் இதயங்களை வென்றுவிட்டாய். இதனை நான் உன்னிடம் கூறியபோது நம்பவில்லை. தற்போதாவது நம்புவாய் என்று நான் நினைக்கிறேன். அதிசயங்கள் உனக்காக காத்திருக்கிறது.இது நியாயம் இல்லை பிக் பாஸ். எனினும் 98 நாட்களுக்கு பிறகு உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி ”என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மற்றொரு பதிவில் தான் மருத்துவமனையில் உள்ளதாக வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது ”கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடலில் கட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை அப்போதே சரிசெய்யாமல் விட்டுவிட்டேன். இப்போது அந்த கட்டி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. எனவேதான் இந்த அவசர சிகிச்சை” என்று பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.