பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷனின் முதல் பதிவு..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷனின் முதல் பதிவு..!

நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீச்ன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீச்ன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் இருந்து நேற்று தர்ஷன் வெளியேறினார். அதனை தொடர்ந்து  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் சீசன் 3யின் இறுதி சுற்றுக்கு முகென் ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் அவரை தொடர்ந்து சாண்டியும் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து தர்ஷன், ஷெரின் மற்றும் லாஸ்லியா ஆகியோரில் தர்ஷன் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்தார். அத்துடன் டாஸ்க்குகள் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு கிட்டத்தட்ட அனைவரும் இவர்தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என்று நினைத்த நிலையில் இவர் வெளியேறியது பலரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”நமக்கு பழக்கம் இல்லாதவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். அதுபோல தான் நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்புக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி. இந்த 98 நாட்களும் என்னை உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டியதற்கு நன்றி. இதுதான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com