கோட்சே வெறும் துப்பாக்கி.. நடிகர் சூர்யா பரபரப்பு பேச்சு…

கோட்சே வெறும் துப்பாக்கி.. நடிகர் சூர்யா பரபரப்பு பேச்சு…

இப்போது கோட்சே குறித்து பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் பட  பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சூர்யா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, காந்தியை கோட்சே சுட்ட பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது எல்லோரும் வன்முறையைப் பற்றி பேசினர். ஆனால் தந்தை பெரியார், அந்த துப்பாக்கியை சுக்கு நூறாக உடைத்து விடுங்கள், கோட்சே வெறும் துப்பாக்கிதான் என்றார். 

மேலும், ஒவ்வொரு நிகழ்வின் பின்னும் ஒரு சித்தாந்தம் இருப்பதாக காந்தி கொலை மூலம் தந்தை பெரியார் சுட்டிக் காட்டியிருப்பதாக, சூர்யா தெரிவித்தார்.

அண்மைக்காலமாக நிகழ்ச்சிகளில் பேசும் சூர்யா, நீட் விவகாரம், இந்தி திணிப்பு, சகிப்புத் தன்மை, கருத்து சுதந்திரம் என பேசி சர்ச்சையில் சிக்கினார். இப்போது கோட்சே குறித்து பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com