அது நான் இல்ல, நயன்தாரா தான்: டாப்ஸி ஓபன் டாக்!

அது நான் இல்ல, நயன்தாரா தான்: டாப்ஸி ஓபன் டாக்!
அது நான் இல்ல, நயன்தாரா தான்: டாப்ஸி ஓபன் டாக்!

ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸி.

ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸி. தற்போது ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கேம் ஓவர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருகிறார்.

தமிழ் படங்களில் நடிக்க யாரும் கூப்பிடாததால் தான் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அவருக்கு இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. தன்னை வளர்த்த தமிழ் சினிமாவை ஒருபோதும் மறக்க மாட்டேன் என கூறியிருந்தார்.

நீங்கள் தான் பட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டாப்ஸி, ‘அப்படியெல்லாம் என்னை ரொம்ப தூக்கி வைத்து பேசாதீர்கள். நான் ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் தான் வாங்குகிறேன். ஆனால் 6 கோடி ரூபாய் வாங்கும் நயன்தாரா தான் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்க தகுதியுடையவர். அவர் அளவுக்கு நான் வர வேண்டும் என்றால், இன்னும் நீண்ட தூரம் திரையுலகில் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com