சினிமா
டப்பிங் பேச ஆசை... தமிழ் படிக்கும் அமைரா தஸ்துர்...
டப்பிங் பேச ஆசை... தமிழ் படிக்கும் அமைரா தஸ்துர்...
அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்துர்.
அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்துர். தற்போது சந்தானத்துடன் ஓடி ஓடி விளையாடு படத்திலும், பிரபுதேவாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பிரபுதேவாவுடன் நடிக்கும் படம் பற்றி அமைரா கூறும் போது, ‘இந்தப் படம் த்ரில்லர் கதையமைப்பில் உருவாகி வருகிறது. நான் நடிக்கும் கதாப்பாத்திரம் மிகவும் வலிமையானது. அதனால் நானே பேசினால் தான் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதே போல் நான் பேசும் வசனத்தை புரிந்து பேச வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக மிக தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். அனைத்து படங்களிலும் இனி என்னுடைய டப்பிங் தான்’ என்கிறார்.