நடுரோட்டுல புரண்டு கூட அழுவாப்ல.. எதிரணியினர் சூதானமா பார்த்து.. உஷாரா,, அடிச்சு ஆடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைமையில் ஒரு அணியும், கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் ஆகியோர் தலைமையில் ஒரு அணியும் களத்தில் மோதுகின்றனர்.
இதில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷை, விஷால் சந்தித்ததாகவும், அப்போது அவர் மிரட்டியதாகவும் தகவல்கள் வந்தது.
இதுதொடர்பாக பேட்டி அளித்த விஷால், ஐசரி கணேஷை சந்தித்து, தான் என்ன காரணத்திற்காக தேர்தலில் நிற்கிறேன் என்று சொன்னேன். அவரும் அவர் நிற்பதற்கான காரணத்தை சொன்னார். ஆனால் நான் அதை வெளியில் சொல்ல முடியாது என்றார்.
விஷாலின் பேட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐசரி கணேஷ் அணியின் தயாரிப்பாளரும், சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, ஐசரி கணேஷ் அண்ணன் அவரை மீட் பண்ணவே இல்லை. ஆனால் மீட் பண்ணுனாராம், மிரட்டினாராம். ஆளும் கட்சி சாதகம்னு எல்லாம் செய்தி வருது. கடந்த தேர்தலில் எலெக்ஷன் அன்னிக்கு நடந்த ட்ராமா இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் என்னென்ன ட்ராமா போட காத்திருக்காரோ தெரியல. நடுரோட்டுல புரண்டு கூட அழுவாப்ல.. எதிரணியினர் சூதானமா பார்த்து.. உஷாரா,, அடிச்சு ஆடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.