நிர்மல் குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார்.
நிர்மல் குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. மும்பையில் உள்ள ஒரு குடிசை பகுதியில், சசிகுமார் ரவுடிகளை துரத்துவது போன்ற காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
அந்தக் காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கேமராக்களை மறைத்து வைத்து எடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் நிஜமாகவே மோதல் நடப்பதாக நம்பி விட்டனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரும் படக்குழுவினரை சுற்றி வளைத்துள்ளனர். இறுதியில் அனைத்தையும் தெளிவுப்படுத்திய பிறகு அவர்கள் சென்றுள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் நிர்மல் குமார் கூறும் போது, ‘போலீசாரிடம் உண்மைகளை தெளிப்படுத்திய பிறகு எங்கள் வேலைகளை மீண்டும் செய்ய தொடங்கினோம். அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் சசிகுமாரை அடையாளம் கண்டு கொண்டனர். அதன் பிறகு அவர்கள் ஆர்வமாக சசிகுமாருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்’ என கூறியுள்ளார்.