பூ ஒன்று மீண்டும் புயலானது…. ஆண்களை அடிச்சு துவைக்க வருகிறார் விஜயசாந்தி….

பூ ஒன்று மீண்டும் புயலானது…. ஆண்களை அடிச்சு துவைக்க வருகிறார் விஜயசாந்தி….

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் விஜயசாந்தி.

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகையாக திகழ்ந்தவர் விஜயசாந்தி. இவரது அதிரடியான சண்டைக் காட்சிகளாலும்,  நடிப்பாலும் எல்லோரையும் கவர்ந்து  புகழின் உச்சியில் இருந்த நிலையில், அரசியலில் களமிறங்கினார். 

முதலில் பாஜகவில் இணைந்தவர் பின்பு தனிக் கட்சி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்து எம்.பி ஆனார். 

திடீர் என காங்கிரஸில் இணைந்து. அதனைத் தொடர்ந்து தோல்வி அடைந்தவர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ளார்.

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகவுள்ள ‘சரிலேறு நீக்கிவேறு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம். அந்த வகையில் தற்போது இந்த படத்தில் நடிக்க தனது உடலை பிட்டாக வைக்க  ஜிம்மில் தீவிர உடல்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com