நேசமணி இன் கோமா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கு, நடிகர் வடிவேலுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன்.
’நேசமணி இன் கோமா’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதில், நடிகர் வடிவேலுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன்.
நேசமணி ஹேஷ்டேக் பிரபலம் ஆனதை அடுத்து, மீடியாக்களுக்கு வடிவேலு பேட்டி அளித்தார். ஒரு பேட்டியில் இயக்குநர் சிம்புதேவனையும் ஷங்கரையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலடியாக சிம்புதேவனிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து பின்னர் மூடர் கூடம் படத்தை இயக்கியவரும், தற்போது அலாவுதீனின் கேமரா என்ற படத்தை இயக்கி வருபவருமான நவீன், தனது ட்விட்டர் பககத்தில் வடிவேலுவை கடுமையாக சாடியுள்ளார்.
அதில், அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குநர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏக வசனங்களில் பேசியிருந்தார். சின்னப் பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றி இருந்தார். இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த டைரக்டரை, ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்.
நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகர் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால், நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிர. ஸ்கிரிப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது. உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால், ஏன் பிறகு நீங்கள் பெரும் பட்ஜெட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்தப் படமுக் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் ஷங்கர் இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
24ஆம் புலிகேசி எனும் படம் வராமல் இருப்பதற்கு உங்களின் அகந்தையும், ஆணவமும்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.