’மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் ரிலிஸ் தேதி அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகுமென அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் ‘திங் மியூசிக்’ நிறுவனம் வாங்கியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுனில், செல்வராகவன், ரிது வர்மா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திறு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய கனல் கண்ணன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மலையாளம் , கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.